ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
‛லவ்வர், குட் நைட்' படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோ தற்போது தயாரித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இதனை அபிஷன் ஜீவிதன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகபதி பெருமாள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார், அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக விழாவில் சசிகுமார் பேசியதாவது: ஒரு படம் நன்றாக வரும் என்கிற 100 சதவீத நம்பிக்கையுடன்தான் படம் செய்கிறோம். ஆனால் அதே நம்பிக்கை ஊக்கம், ரசிகர்களிடமிருந்து வரும்போதுதான் அது நிறைவாகிறது. தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவனை போல இந்த படத்தின் ரிசல்ட்டுக்காக மே 1ம் தேதி வரை காத்திருப்போம்.
இந்த படத்தின் இயக்குனருக்கு 24 வயதுதான் ஆகிறது. எல்லோரும் பயந்தார்கள். ஆனால் நான் வயது முக்கியமில்லை, கதைதான் முக்கியம் என்று நடிக்க ஒப்புக் கொண்டேன். 18 வயது பையனுக்கு அப்பாவாக நடிக்க எந்த ஹீரோவும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எங்கு சென்றாலும் இந்த கதை என்னிடம்தான் வரும் என்று நம்பினேன். அப்படியே வந்தது.
எனக்கு ஜோடி சிம்ரன் என்றதும் எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். சிம்ரன் எப்படிங்க உங்க கூட நடிக்க சம்மதிச்சாங்க என்று கேட்கிறார்கள். ஏன் நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா. அந்த தகுதி எனக்கில்லையா? என்னைப்போலவே அவரும் கதையை நம்பித்தான் படத்திற்கு வந்தார். அவர் இப்போதும் ஹீரோயின்தான். இந்த படத்திலும் நான் ஹீரோ, அவர் ஹீரோயின்.
இந்த படத்தின் ஸ்கிரிப்டில் என்ன இருந்ததோ? அதை அப்படியே படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர். இதுவே படத்தின் முதல் வெற்றி. இது இலங்கை தமிழர்கள் இந்தியா வந்து செட்டிலாகும் வேதனைகளை காமெடியாக சொல்கிறோம். படம் காமெடியாக இருந்தாலும் அவர்களின் வேதனை அதற்குள்ளாக இருக்கும். இது உலகம் முழுக்க உள்ள நாடிழந்த மக்களுக்கு பொருந்துகிற கதை.
நாம் இப்போது தமிழை மறந்து ஆங்கிலம் பேசுகிறோம். ஆனால் தமிழ் மொழி, கலாசாரம் இவற்றை விட்டு விடக்கூடாது, தமிழ் மொழியை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது படம். இந்த படத்தை பார்த்து விட்டு பத்து பேராவது தமிழ் கற்க முன்வந்தால் அதுவே இந்த படத்தின் வெற்றிதான். கமல்ஹாசன் நடித்த 'தெனாலி' படத்தின் இன்ஸ்பிரேசனில்தான் இந்த படம் உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.