'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இன்றைய இளம் தலைமுறையிடம் இருக்கும் இரண்டு முக்கிய வார்த்தைகள் 'வைப்' மற்றும் 'தக்'. அதனால்தானோ என்னவோ மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு 'தக் லைப்' எனப் பெயர் வைத்துள்ளார்கள்.
சென்னையில் நேற்று இப்படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அது முடிந்த பின்பு, யு டியுபில் வெளியிடுவதற்காக கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன் ஆகியோர் பங்கேற்ற ஒரு பேட்டியை படக்குழுவினர் எடுத்துள்ளார்கள்.
ஒவ்வொருவரிடம் 'தக் லைப்' ஆக, 'வைப்' ஆக மட்டுமே அதில் கேள்வி கேட்கப்பட்டுள்ளதாம். ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சி விரைவில் யு டியூபில் வெளியாக உள்ளது.
அப்போது த்ரிஷாவிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்டதற்கு, “எனக்கு திருமணத்தில் நம்பிக்கையில்லை. அது நடந்தாலும் ஓகே தான், நடக்காமல் போனாலும் ஓகே தான்' என பதிலளித்துள்ளார்.
41 வயதான த்ரிஷா, 42 வயதான சிலம்பரன் தமிழ் சினிமாவில் இன்னும் 'பேச்சுலர்' ஆகவே இருக்கிறார்கள். த்ரிஷாவுக்கு திருமண நிச்சயம் ஒன்று நடைபெற்றது. ஆனால், அது திருமணத்தில் முடியவில்லை. சில முன்னணி நடிகைகளுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டவர் சிம்பு.
நேற்று இவர்கள் பேசிய அந்த வீடியோ யு டியுபில் வெளிவந்தால் இன்னும் பல 'தக் லைப்' பதில்கள் பற்றி தெரிய வரும்.