லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
தமிழகத்தில் தமிழ் படங்களின் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகர்களின் படங்களும் பல சாதனைகளை செய்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.
1. ஜெயிலர்
ரஜினிகாந்த் நடித்து நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜெயிலர். இந்த படம் 2023ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகியது. உலகம் முழுக்க 700 கோடி வசூலித்த இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 212 கோடி வசூலித்துள்ளது. இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
2. லியோ
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் உலகம் முழுக்க 1000 கோடி வசூல் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் கலவையான விமர்சனத்தால் நினைத்த வசூல் எட்டவில்லை. ஆனாலும் உலகம் முழுக்க 600 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்ற இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 202 கோடிகளை வசூலித்து நம்ம பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
3. பொன்னியின் செல்வன் 1
இந்திய திரையுலகமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். விக்ரம், கார்த்தி, ரவி மோகன், ஐஸ்வர்யா ராய் என பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடி வசூலித்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் 200 கோடி வசூலித்து தமிழகத்தில் முதல் 200 கோடி வசூலித்த படமாக இந்த திரைப்படம் அமைந்தது. நம்ம பட்டியலில் தமிழகத்தில் அதிக வசூலித்த படங்கள் வரலாற்றில் இந்த பொன்னியின் செல்வன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
4. விக்ரம்
பல தொடர் தோல்விகளை சந்தித்த கமல்ஹாசனுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் இந்த விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை கமலே தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 180 கோடிக்கு மேல் வசூலித்து நம்ம பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. உலகம் முழுக்க இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
5. அமரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த அமரன். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூலித்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் 160 கோடிக்கு வசூலித்து நம்ம பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
மேற்கண்ட அனைத்தும் தமிழகத்தில் உள்ள முன்னணி விநியோகஸ்தர்கள் மூலமாகவும், திரையரங்க உரிமையாளர்கள் மூலமாகவும் கிடைக்கப்பெற்ற தகவல்களே.