பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! |

‛குட் பேட் அக்லி' படத்தில் ‛ஒத்த ரூவாய் பாடல்' உள்ளிட்ட தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் ஏப்., 10ல் வெளியான படம் ‛குட் பேட் அக்லி'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தபடம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 5 நாட்களில் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளது.
சமீபகாலமாக பழைய பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்தி டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்த படத்தில் ‛‛தொட்டு தொட்டு பேசும் சுல்தானா..., ஒத்த ரூவாய் தாரேன்...'' போன்ற சில பாடல்களை பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக இளையராஜா இசையில் வெளிவந்த ‛‛ஒத்த ரூவாய் தாரேன்..., இளமை இதோ இதோ..., என் ஜோடி மஞ்சக்குருவி...'' ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் அவரது வக்கீல், ‛குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஒருவார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இந்த பாடல்கள் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




