‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் வெளியானது. அதற்காக சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதன் மூலம் எந்த மாதிரியான ஒரு படத்தை உருவாக்க இருக்கிறோம் என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே, இப்படம் பற்றிய ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. படத்திற்கான மொத்த பட்ஜெட் 800 கோடி என்கிறார்கள். 200 கோடி ரூபாய் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கும், 200 கோடி ரூபாய் அமெரிக்காவில் செய்ய உள்ள விஎப்எக்ஸ் செலவுகளுக்கும், இதர செலவுகள் படத்தின் கலைஞர்கள் சம்பளம், விளம்பரம், இன்னும் பிற செலவுகள் என்கிறார்கள்.
ஒரு தகவல் படி படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி ரூபாய் சம்பளம், இயக்குனர் அட்லிக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் என சொல்கிறார்கள். ஆனால், மற்றொரு தகவல்படி இருவரும் சம்பளம் வாங்காமல் நடிக்க உள்ளதாகவும், படத்தின் லாபத்தில் பங்கு பேசி உள்ளார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.
கதாநாயகன் அல்லு அர்ஜுனுக்கு லாபத்தில் 30 சதவீதம், இயக்குனர் அட்லிக்கு லாபத்தில் 15 சதவீதம் என பேசி இருக்கிறார்களாம். அப்படிப் பார்த்தால் அல்லு அர்ஜுனுக்கு 250 கோடி வரையிலும், அட்லிக்கு 125 கோடி வரையிலும் சம்பளமாகக் கிடைக்கும் என்கிறார்கள்.
படப்பிடிப்பு ஆரம்பத்த பின் இன்னும் இது போன்று பல தகவல்கள் உலா வரும்.