ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஒரு காலத்தில் வெள்ளிவிழா இயக்குனராக இருந்த டி.ராஜேந்தருக்கு தொடக்கம் முதலே நடிகராகும் ஆசை இருந்தது. ஒரு தலை ராகம் படத்தில் சந்திரசேகர் நடித்த கேரக்டரில் அவர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் நடிக்கவில்லை. அதோடு தனது முகத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கமும் இருந்தது. என்றாலும் தனது படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் தலைகாட்டி வந்தார்.
இந்த நிலையில்தான் 'உயிருள்ளவரை உஷா' படத்தை தயாரித்து, இயக்கினார். இந்த படத்தில் காதலர்களுக்கு உதவும் நல்ல தாதாவாக 'செயின் ஜெயபால்' என்ற கேரக்டரை வலுவாக எழுதியிருந்தார். இந்த கேரக்டரில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தோன்றவே ரஜினியை சந்தித்து கதை சொன்னார். அதோடு தேவைப்பட்டால் செயின் ஜெயபால் கேரக்டரை இன்னும் பெரிதாக்கி படத்திற்கு 'செயின் ஜெயபால்' என்றே டைட்டில் வைப்பதாக கூறினார். ஆனால் ரஜினி நடிக்க மறுத்து விட்டார். டி.ராஜேந்தர் எழுதும் அடுக்குமொழி வசனத்தை தன்னால் பேச முடியாது என்று கருதி தவிர்த்தாகவும் கூறுவார்கள்.
அதன்பிறகு அந்த கேரக்டரில் டி.ராஜேந்தரே நடித்தார். முதன்முதலில் டி ராஜேந்தர் முதன்மை கேரக்டரில் நடித்த படம் இது. படமும் பெரிய வெற்றி பெற்றது. ஜெயின் ஜெயபால் கேரக்டரும் பேசப்பட்டது. அதன்பின் தொடர்ந்து நடிக்கவும் தொடங்கினார்.




