பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

'சித்தா' படத்தை தொடர்ந்து இயக்குனர் எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'வீர தீர சூரன்'. இதில் விக்ரம் கதாநாயகனாக, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாளை மறுநாள் (மார்ச் 27ம் தேதி) இப்படம் வெளியாகிறது.
அதேநாளில், நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கும் 'எல் 2 எம்புரான்' படமும் வெளியாகிறது. மலையாளத்தில் உருவானாலும் பான் இந்தியா வெளியீட்டாக வருவதால் அந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திலும் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 'வீர தீர சூரன்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாவது குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு, ''மார்ச் 27ல் நான் நடித்த இரு படங்களும் ரிலீசாகின்றன. இரு படங்களும் சிறப்பாக வந்துள்ளன. அப்படி பார்க்கையில் அன்றைய தினம் விக்ரமுக்கு ஒரு ஹிட், மோகன்லாலுக்கு ஒரு ஹிட். ஆனால் எனக்கு மட்டும் ரெண்டு ஹிட்'' என்றார்.