சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மதராஸி'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சென்னையில் ஆரம்பமானது. கடந்த வருடமே படப்பிடிப்பு முடிந்து வெளியாகி இருக்க வேண்டிய படம்.
சல்மான்கான் நடிக்க 'சிக்கந்தர்' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்தப் படத்தை அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார் முருகதாஸ். 'சிக்கந்தர்' படம் அடுத்த வாரம் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. அதன்பின் 'மதராஸி' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்க உள்ளார் முருகதாஸ்.
ஏப்ரல் மாத மத்தியில் ஆரம்பமாகும் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்களுக்கும் மேல் நடக்க வேண்டி இருக்கிறதாம். அதை முடித்த பின்பு படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம். இந்தப் படத்தை 'கஜினி' படத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் ஏஆர் முருகதாஸ். ஒரு பக்கம் காதலும், மறுபக்கம் ஆக்ஷனும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.