தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் | காதலியுடன் பொது நிகழ்வில் முதல்முறையாக ரவி மோகன் | 'கைதி 2' படத்திற்குப் பிறகு 'ஹிட் 4'ல் நடிக்க உள்ள கார்த்தி | 'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரெட்ரோ'. இப்படம் மே மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் பாடி, ஆடியும் உள்ள 'கனிமா' என்ற குத்துப் பாடலை இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். 90களில் நடக்கும் ஒரு திருமணக் கொண்டாட்டத்தில் இடம்பெறும் பாடலாக இருக்கும் இந்தப் பாடல் 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆகியுள்ளது. அதற்குள்ளாகவே ஒரு கோடி பார்வைகளை யு டியூப் தளத்தில் கடந்துள்ளது.
வித்தியாசமான நடன அமைப்பு, சூர்யா, பூஜா ஹெக்டேவின் அசத்தலான நடனம் ஆகியவற்றால் இப்பாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பாடலுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.