லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? | விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது? |
விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வீர தீர சூரன். சித்தா என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் எஸ்யு அருண்குமார் இயக்கியுள்ளார். இதில் நடிகர் எஸ்ஜே சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்க இன்னொரு மிக முக்கியமான வேடத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மார்ச் 27ல் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு பேசும்போது, "எனக்கு மூன்று முறை கேரள அரசு விருது கிடைத்துள்ளது. ஒரு முறை தேசிய விருது கிடைத்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு பெரிய கதை உண்டு. எனக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். முதல் முறை கேரளா அரசு விருது கிடைத்தபோது எனக்கு முதல் குழந்தை பிறந்தது. இரண்டாவது முறை கேரளா அரசு விருது கிடைத்தபோது இரண்டாவது குழந்தை பிறந்தது. மூன்றாவது முறையாக கேரள அரசு விருதும், தேசிய விருதும் கிடைத்த போது மூன்றாவது குழந்தை பிறந்தது. இதற்கு அடுத்ததாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றால் நான்காவது குழந்தையும் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். இது பற்றி என்னுடைய மனைவி இடமும் பேசுவேன் என்று நகைச்சுவையுடன் பேச விக்ரம், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட அரங்கத்தில் இருந்த அனைவருமே இவரது பேச்சை கைதட்டி ரசித்தனர்.