'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
பொதுவாக மலையாள படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவதில்லை. காரணம் தமிழ் மக்களுக்கு மலையாளம் எளிதில் புரியும் என்பதால். பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். மற்ற படங்கள் ஓடிடியில் வெளியாகும்போது தமிழிலும் வெளியாகும். தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆபீசர் ஆன் டூட்டி' என்ற படம் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை (மார்ச் 14) வெளியாகிறது. இந்த படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
போலீஸ் கிரைம் திரில்லர் படமான இதில் குஞ்சாகோ போபன் போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார். அவரது மனைவியாக பிரியாமணி நடித்துள்ளார். இவர்கள் தவிர ஜெகதீஷ், விஷாக் நாயர், மீனாட்சி அனூப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜித்து அஷ்ரப் இயக்கி உள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார், ரூபி வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.