மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் | இரண்டாம் ராணி எலிசெபத்திற்கு பிறகு ராம்சரணுக்கு செல்லப்பிராணியால் கிடைத்த பெருமை |
தெலுங்கு திரையுலகில் அடுத்த பிரம்மாண்ட ரிலீஸ் ஆக எதிர்பார்க்கப்படுவது, பிரபல நடிகரும் தெலுங்கு நடிகர் சங்கத் தலைவருமான விஷ்ணு மஞ்சு தயாரித்து, நடித்து வரும் ‛கண்ணப்பா' திரைப்படம் தான். சிவபக்தனான கண்ணப்பனை பற்றி கூறும் புராண படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 25ஆம் தேதி இந்த படம் பான் இந்திய ரிலீசாக வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தை பான் இந்திய படமாக தயாரிக்க விரும்பிய விஷ்ணு மஞ்சு இதில் முக்கிய பிரபலங்களான பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மலையாளத்தில் இருந்து மோகன்லால், தெலுங்கில் நடிகர் பிரபாஸ், கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டவர்களை அழைத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.
இதில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது கதாபாத்திர டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் விஷ்ணு மஞ்சு கலந்துரையாடிய போது, பிரபாஸ் இந்த படத்தில் நடிப்பதற்காக பணம் எதுவும் வாங்கவில்லை என்றும் இந்த படத்தின் கதையையும், கதாபாத்திரத்தையும் அவரிடம் கூறியபோது மறு வினாடியே இந்த படத்தில் நடிக்க மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டார் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு மஞ்சு.