சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்தால் உடனடியாக சக்சஸ் மீட் நடத்துவது வழக்கம். படத்தின் வெற்றிக்குக் காரணமான பத்திரிகையாளர்களே என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால், ஒரு சில படக்குழுவினர் அவர்கள் மட்டுமே சக்சஸ் பார்ட்டியைக் கொண்டாடுவார்கள். வேறு யாரையும் அழைக்க மாட்டார்கள். அப்படியான ஒரு சக்சஸ் பார்ட்டியை 'டிராகன்' படக்குழு நடத்தியுள்ளது.
நட்சத்திர ஓட்டல் ஒன்றில் படக்குழுவினரும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் யாருக்கும் எந்தவிதமான அழைப்பும் இல்லை. படம் வெளியான அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் காட்சியின் போது அடுத்த சில நாட்களில் கண்டிப்பாக சக்சஸ் மீட்டை உங்களுடன் கொண்டாடுவோம் என்றார்கள்.
100 கோடி வசூலுக்கு பத்திரிகை விமர்சனங்களும் ஒரு காரணம். எதிர்பாராத பெரும் வெற்றி வந்ததும் பத்திரிகையாளர்களை மறந்துவிட்டு ஒரு பார்ட்டியைக் கொண்டாடியுள்ளார்கள். இப்படியான பல நன்றி மறந்த கொண்டாட்டங்களை பார்த்திருக்கிறோமே என பத்திரிகையாளர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். வளரும் நாயகனாக பிரதீப் ரங்கநாதனும், இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவும் இதை கவனத்தில் கொள்வது நல்லது.
தெலுங்கில் மட்டும் பத்திரிகையாளர்களை அழைத்து சக்சஸ் மீட் கொண்டாடியவர்கள் தமிழ் பத்திரிகையாளர்களை இங்கு புறக்கணித்தது சரியா என்ற கேள்வி பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.