'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
தமிழ் சினிமாவையும், பட்டப் பெயர்களையும் பிரிக்கவே முடியாது. எத்தனை பட்டப் பெயர்கள் இங்கு வலம் வந்து கொண்டிருக்கிறது என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். அந்தக் காலத்தில் ஆரம்பமானது இந்தக் காலத்திலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு சிலர் மட்டுமே தங்களை பட்டப் பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். 2021ம் ஆண்டு நடிகர் அஜித் தன்னை 'தல' என்று அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு அறிக்கை வெளியிட்டார். அதற்கு முன்பும் தன்னை 'அல்டிமேட் ஸ்டார்' என அழைக்க வேண்டாம் என்றும் சொன்னார். அஜித் சொன்னதை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் தற்போது அவரை அஜித் என்றும் 'எகே' என்று மட்டுமே குறிப்பிட்டு வருகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசனுக்கு ஆரம்ப காலங்களில் காதல் இளவரசன் என்ற பட்டம் இருந்தது. அதன்பின் 'ஆழ்வார்பேட்டை ஆண்டவர்' என்றும் 'உலக நாயகன்' என்றும் அழைக்க ஆரம்பித்தார்கள். கடந்த வருடம் தன்னை இனி 'உலக நாயகன்' என அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார் கமல்ஹாசன். அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் தன்னை 'லேடி சூப்பர்ஸ்டார்' என அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார். அது குறித்து பல டிரோல்கள்தான் அதிகமாக வெளிவந்தன. இருந்தாலும் மறுபக்கம் அவரது அறிக்கை வரவேற்பையும் பெற்றுள்ளது.
இன்னும் பல நடிகர்கள் தங்களது பட்டப் பெயர் மாயையிலிருந்து வெளிவரவில்லை. அதையெல்லாம் விட்டுத் தள்ளுவதற்கு பெரிய மனம் வேண்டும். அப்படியான மனதுடன் அடுத்து யார் அறிக்கை விடப் போகிறார்கள் எனக் காத்திருப்போம்.