பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்போது ஜெய் ஹீரோவாக நடிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்க, முக்கிய வேடங்களில் யோகிபாபு, கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. முக்கிய சமூக பிரச்னை ஒன்றை காதலும், திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகிறது. பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரிய மாற்றங்கள், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி, இப்படம் பேசவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.