விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
சினிமாவின் முதல் 20 ஆண்டுகளில் திரையரங்குளில் மாலை 6 மணி மற்றும் 10 மணி என இரண்டு காட்சிகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. பகல் காட்சியை தொடங்கி வைத்தது 'ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி' என்கிற படம். எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி நடித்த முக்கியமான படம். இதில் அவர் சிந்தாமணியாக டைட்டில் கேரக்டரில் நடித்தார். நாடக காமெடி நடிகர் பி.எஸ்.கோவிந்தன் நாயகனாக நடித்தார். இவர்களுடன் எஸ்.வரலட்சுமி, மாதுரி தேவி, பி.கே.சரஸ்வதி, ஆர்.பத்மா, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், ஆர்.பாலசுப்ரமணியம், டி.எஸ்.துரைராஜ், கே.கே. பெருமாள் உள்பட பலர் நடித்தார்கள். மார்டன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து, இயக்கி இருந்தார்.
ஆண்களை கேள்வி கேட்டு சரியான பதில் சொல்லாதவர்களின் தலையை வெட்டிய சிந்தாமணி என்ற இளவரசியை பற்றிய நாட்டுப்புற கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவானது. இது ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்பதால் பெரிய ஆண் நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லை. நாட்டுப்புற கதையாக இருந்தாலும் பெண் விடுதலை பற்றி பேசிய இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியவர் கவிஞர் பாரதிதாசன்.
'சம்பூர்ண ராமாயணம்' படத்திற்கு பிறகு இதுதான் நீளமான படம் என்கிறார்கள் (20,050 அடி). படம் வெளியாகி எல்லா இடங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இரவு 10 மி காட்சி நள்ளிரவை தாண்டியும் செல்வதால் பார்வையாளர்கள் வீடு திரும்ப சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து அரசுக்கு தயாரிப்பாளர் சுந்தரம் கடிதம் எழுதினார். 10 மணி காட்சிக்கு பதிலாக பகல் 1 மணிக்கு காட்சி நடத்த அனுமதி கோரி இருந்தார்.
இதனை ஏற்ற அரசு சோதனை முயற்சியாக சென்னை பிராட்வே தியேட்டரில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும் பகல் ஒரு மணி காட்சி (மேட்னி ஷோ) நடத்த ஒப்புக் கொண்டது. பின்னர் 3 ஷோக்கள் நடத்த ஒப்புக் கொண்டது. பகல் காட்சிக்கு ஏற்ப தியேட்டரும் மாற்றி அமைக்கப்பட்டது.
வி.என்.ஜானகி அம்மையார் முதல்வரான போது இந்த படத்தின் நீளத்தை குறைத்து வண்ணகலரில் வெளியிடும் திட்டம் துவங்கியது. ஆனால் குறுகிய காலத்தில் அவர் பதவி இழந்து விடவே அந்த திட்டம் கைவிடப்பட்டது.