‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
தேசிங்கு பெரியசாமி அடுத்து நடிகர் சிலம்பரசனின் 50வது படத்தை இயக்குகிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்கான பணிகள் நீண்ட வருடங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற ஸ்வீட் ஹார்ட் எனும் பட விழாவில் தேசிங்கு பெரியசாமி கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் தேசிங்கு பெரியசாமி கூறுகையில், "சிம்பு 50வது படம் மீண்டும் தொடங்குவதற்கு முக்கிய காரணம் யுவன் தான். அவரிடம் யதார்த்தமாக ஒருநாள் இந்த படத்தின் கதையை கூறினேன். இந்த கதையை கேட்டுவிட்டு எப்போது படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று கேட்டார். அவரே சிம்புவிற்கு போன் செய்தும் பேசினார். அவர் கொடுத்த அந்த ஊக்கத்தால் தான் டிராப் ஆக வேண்டிய படம் மீண்டும் தொடங்கியுள்ளது" என கூறினார் .