110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் | பிளாஷ்பேக் : நடிகையான சர்க்கஸ் கலைஞர் | கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன் | முன்னணி ஹாலிவுட் நடிகர், நடிகை மரணம் | முருகதாஸ், சல்மானின் ‛சிக்கந்தர்' பட டீசர் வெளியானது | சப்தம் படத்தின் காலை காட்சி வெளியாகவில்லை |
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'டிராகன்'. முதல் வார இறுதியில் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்தது. வார நாட்கள் ஆரம்பமான பின்னும் படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் 100 கோடி வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியான இப்படத்திற்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் விசாகப்பட்டிணத்தில் உள்ள சில தியேட்டர்களில் ரசிகர்களுடன் சேர்ந்து இப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியது. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, பிரதீங் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் டுடே' படம் அங்கு வெற்றிகரமாக ஓடியது. அதனால், 'டிராகன்' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படமும் லாபகரமான படமாகவே அமையும். அடுத்தடுத்த வெற்றிகளால் தெலுங்கிலும் பிரதீப் பிரபலமாகிவிட்டார்.