'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது கார்த்தி உடன் சர்தார் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் தெலுங்கில் முதன்முதலாக பிரபாஸ் உடன் இணைந்து ‛தி ராஜா சாப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கும் இப்படத்தில் நிதி அகர்வால், சஞ்சய் தத் ஆகியோரும் நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக தயாராகிறது.
மாளவிகா கூறுகையில், ‛‛பொதுவாக பெரிய ஹீரோக்கள் படங்களில் நாயகிக்கு குறைவான காட்சிகளே இருக்கும். ஆனால் இந்த படத்தில் நான் படம் முழுதும் வருகிறேன். மேலும் இதுவரை நான் நடித்திராத ஹாரர் வகை காமெடி படம். அதனால் இந்த படத்தில் நடிக்கும் ஆர்வம் இன்னும் அதிகமானது. பிரமாண்ட படத்தில் இதுமாதிரியான கேரக்டர் எல்லாம் எப்போதாவது ஒருமுறை தான் அமையும்'' என்றார்.