ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி : முன்பதிவு நிலவரம் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன தேவயானி | மகனுக்காக படம் தயாரிக்காதீர்கள் : தயாரிப்பாளர்களுக்கு பேரரசு வேண்டுகோள் | 12 படங்களில் நடித்தும் ஒரே ஒரு படம் தான் வெளியாகி உள்ளது : புதுமுக நடிகை வருத்தம் | பிளாஷ்பேக் : எதிர்ப்புகளால் மாற்றப்பட்ட ரஜினி படத்தலைப்பு | பிளாஷ்பேக் : டி.எஸ்.பாலையா ஹீரோவாக நடித்த 'சண்பகவல்லி' | பஹல்காம் தாக்குதல்: நடிகர் அஜித் கண்டனம் | அப்பாவுக்கு பத்மஸ்ரீ, மகனுக்கு பத்மபூஷன் | நிறைவுக்கு வரும் 'குட் பேட் அக்லி' ஓட்டம் | அக்டோபரில் 'பாகுபலி' ரீரிலீஸ் |
தெலுங்கில் நானி நடிப்பில் கடைசியாக 'சரிபோதா சனி வாரம்' என்ற படம் வெளியான நிலையில், தற்போது 'ஹிட்-3' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சைலேஷ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்தில் விஸ்வாக் சென் மற்றும் 2வது பாகத்தில் அதிவி சேஷ் நாயகர்களாக நடித்திருந்தனர். 2வது பாகத்தின் முடிவில் 3வது பாகத்திற்கான லீட் வைக்கப்பட்டிருந்தது. அதில், 3வது பாகத்தில் நானி, ஒரு புதிய கேஸை விசாரிப்பதுபோல் முடிக்கப்பட்டிருக்கும்.
அதன்படி, 3வது பாகத்தில் நானி தற்போது நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இன்று ஹிட்-3 படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரத்தம் தெறிக்கும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த டீசர் வைரலாகி வருகிறது. அதோடு இந்த படம் வருகிற மே 1ம் தேதி திரைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.