ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
தமிழ், மலையாளத்தில் தயாராகி வரும் படம் 'டெக்ஸ்டர்'. இதில் 'வெப்பன்' ராஜூ, கோவிந்த், யுக்தா பிரேமி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ஹரீஷ் பெராடி நடித்துள்ளனர். ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீநாத் விஜய் இசை அமைத்துள்ளார். ராம் எண்டர்டெயினர்ஸ் சார்பில் பிரகாஷ் எஸ்.வி தயாரித்துள்ளார்.
இது பிரபலமான ஹாலிவுட் கிரைம் திரில்லர் வெப் தொடரான டெக்ஸ்டரின் தொடர்ச்சி என்கிறார் இயக்குனர் சூரியன்.ஜி. இது குறித்து அவர் மேலும் கூறும்போது "அமெரிக்காவில் மிகப் பிரபலமான வெப்சீரிஸ், 'டெக்ஸ்டர்'. சிறுவயதில் தனது அம்மாவை சிலர் பலாத்காரம் செய்து கொலை செய்ததைப் பார்க்கும் சிறுவன், பெரியவனான பிறகு அவர்களை தேடிக் கண்டுபிடித்து கொல்வான். இது அவனுக்கு மிகவும் பிடித்துவிடுவதால், தொடர்ந்து கொலைகள் செய்வான். அக்கதையின் தொடர்ச்சியாகவே இந்த படம் தயாராகி உள்ளது" என்றார்.