நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 23ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் 'டிராகன்'. ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் வசந்த பாலன் தனது இணையப்பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், 'இன்றைய சமூகத்தில் குற்றம் செய்வதை ஒரு சாரர் சாகசமாக, அறிவார்ந்தமாக, புதிதாக வாழத் தெரிந்தவராக, இருக்கிற காலமும் மனநிலையும் நிரம்பி வழிகிறது. குற்ற உணர்ச்சியை மொத்தமாக மூளையின் எந்த பகுதியிலும் சேமிக்காத படி நூற்றாண்டு மறதி நோயாக மறந்து மாறிவிட்டது.
குற்றம் செய்த குற்றவாளிக்கு குற்றத்தால் ஏற்படுகின்ற குற்ற உணர்ச்சியும் அந்த குற்ற உணர்ச்சியால் குற்றவாளி தனக்கு தானே தந்து கொள்கிற தண்டனையும் பரிதாபம் தான். ஒரு ஆரோக்கியமான சமூகத்தை எந்நாளும் நிறுவிக் கொண்டே இருக்கும். இந்த பூமர் கருத்தை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ளும்படியாக ஒரு கதையை மணி மணியாக கோர்த்து இன்று பார்க்கும் இளைஞர்களின் ஒருவனாக கதாநாயகனை மாற்றி அவனோடு ரசிகர்களை கொண்டாட வைத்து கலங்க வைத்து குற்ற உணர்ச்சிகள், அழ வைக்கிற மிகவும் அழகான ஒரு முயற்சியை இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து செய்து இருக்கிறார். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
படத்தில் முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை ஒரு காட்சியை கூட இந்த படத்திற்கு தேவையில்லாத காட்சி என்று சொல்லிவிட முடியாதபடி மிகவும் கவனமாக திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த திரைக்கதைக்கான மிகவும் சிறப்பு என்னவென்றால், லட்ச முறை சொல்லப்பட்ட கல்லூரி கதையில் இத்தனை சுவாரசியங்களையும் இத்தனை தருணங்களையும் உருவாக்கி காட்ட முடியும் என்பதுதான். படத்தின் கடைசி நொடி வரை ஆச்சரியங்களை முடிக்க, வைக்கப்பட்டு இருக்கிற திரைக்கதை இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.
பிரதீப் மிக எளிமையாக இந்த கதாபாத்திரத்தை பிரமாதமாக தன் தோள்களில் முதல் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை சுமந்து செல்லும் போது அவருடன் சிரித்து அழ, போதையில் குடிக்க, காதலியை முத்தமிட, குற்ற உணர்ச்சியில் தவிக்க என்று அழகாக பயணிக்க முடிகிறது. மிஷ்கினுக்கும் ஜார்ஜுக்கும் மிகப் பிரமாதமான கதாபாத்திரங்கள். அவர்கள் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் மொத்த திரையரங்கையும் தங்கள் பக்கம் இழுக்கிற ஆளுமையோடு நடிப்பை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
யூடியூப் பிரபலங்கள் திரையில் தோன்றும் போது திரையரங்கம் அதிர்ந்து அதிர்ந்து அடங்குகிறது. இன்றைய ரசிகர்கள் திரைக்கதையை தாண்டி யூடியூப்பில் வாழ்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. இயக்குனர், தயாரிப்பாளர் உட்பட மொத்த பட குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று அந்த பதிவில் இயக்குனர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.