பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கடந்த ஆண்டில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தை நாடி இருக்கும் ஜெயம் ரவி, தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றி இருப்பவர், தனது அலுவலகத்தை மும்பைக்கு மாற்றி இருக்கிறார். அதோடு எதிர்காலத்தில் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கத்திலும் அவர் தீவிர கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது புதிய படங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'ஜீனி' படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. அதையடுத்து தற்போது 'பராசக்தி, கராத்தே பாபு' என்ற இரண்டு படத்தில் நடித்து வருகிறேன். இதில் பராசக்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளேன். இன்னொரு பக்கம் 'கராத்தே பாபு' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கணேஷ்பாபு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதத்தோடு முடிந்துவிடும்'' என்கிறார் ரவி மோகன்.