பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோ | நடிகை வைபவி சாண்டில்யா திருமணம் | 'டிராகன், நி.எ.மே.எ.கோபம்' : முதல் நாள் வசூல் | பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு | நெருக்கமான மற்றும் முத்தக்காட்சிகளுக்கு தடை போட்டுக்கொண்ட உன்னி முகுந்தன் | லூசிபர் 2ம் பாகத்தில் புத்திசாலித்தனமாக இணைந்தேன்: நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | ஓடிடியில் வெளியான டாக்கு மகாராஜ் : ஊர்வசி ரவுட்டேலாவின் காட்சிகள் நீக்கமா ? | 'டிராகன்' வரவேற்பு : 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' க்கு லாபம் | இரண்டு த்ரில்லர் படங்கள் மோதலில் பிப்ரவரி 28 | 'சண்டக்கோழி' படத்தில் நடிக்க மறுத்த விஜய் : லிங்குசாமி தகவல் |
கடந்த 2013ம் ஆண்டில் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளிவந்த படம் 'திரிஷ்யம்'. இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்தனர். தமிழில் கமல்ஹாசன் பாபநாசம் எனும் பெயரில் ரீமேக் செய்தார்.
அதன்பிறகு கடந்த 2021ம் ஆண்டில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் 'திரிஷ்யம் 2' கொரோனா காலகட்டத்தினால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஹிந்தி, தெலுங்கிலும் ரீ-மேக் ஆனது.
இந்நிலையில் திரிஷ்யம் 3 உருவாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மோகன்லால் அவரின் சமூக வலைதள கணக்கில் திரிஷ்யம் 3ம் பாகம் உருவாகிறது என அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛கடந்த காலம் அமைதியாக இருக்காது. திரிஷ்யம் 3 உறுதியாகிவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார்.