நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் ராஷ்மிகா தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நாயகியாக மாறிவிட்டார். விக்கி கவுசல் உடன் இவர் நடித்துள்ள ‛சாவா' படம் இன்று(பிப்., 14) வெளியாகி உள்ளது. மராட்டிய மன்னர் சாம்பாஜி மகாராஜ் வாழ்க்கையை தழுவி சரித்திர படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ராணி ஏசுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார். பொதுவாகவே ராஷ்மிகாவிற்கு நேஷனல் கிரஷ் என்ற அடைமொழி உள்ளது. ஆனால் இந்த பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவாவது என்கிறார்.
இதுபற்றி ராஷ்மிகா கூறுகையில், ‛‛சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள், பெயர்கள் எல்லாம் வாழ்க்கையில் உதவுவதில்லை. அது ரசிகர்களின் அன்பினால் கிடைப்பது, அது வெறும் பெயர்கள் மட்டுமே. எனது ரசிகர்கள், நலம் விரும்பிகளை என் இதயத்திற்கு அருகில் வைத்துள்ளேன். அதை நம்பி படங்களில் நடிக்கிறேன். ரசிகர்களின் அன்பை எப்போதும் முதன்மையானதாக கருதுகிறேன். அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக உள்ளேன். தென்னிந்தியா, வட இந்தியாவில் நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கடினமாக உள்ளது. அதேசமயம் அவர்களின் அன்புக்காக நான் எனது தூக்கத்திற்கு பாய் சொல்கிறேன்'' என்றார்.