'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சோசியல் மீடியாவில் இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களை பயன்படுத்தி வரும் பிரபலங்களின் கணக்குகள் அவ்வப்போது ஹேக் செய்யப்படுவதும் அவற்றில் சம்பந்தமில்லாத தகவல்கள் பகிரப்பட்டு பரபரப்பு ஏற்படுத்துவதும் அவ்வப்போது நடைபெற்று வருவதுதான். அந்த வகையில் தற்போது சைபர் கிரைம் விஷமிகள் மூலமாக நடிகை திரிஷாவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட பின் அதில் திரிஷா கிரிப்டோ கரன்சி குறித்து பகிர்ந்துள்ளதாக ஒரு ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக இதுகுறித்து பகிர்ந்துள்ள திரிஷா, தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதை மீட்டெடுக்கும் வரை அதில் எது பதிவிடப்பட்டாலும் அது தன்னுடையது பதிவு அல்ல என்றும் ஒரு எச்சரிக்கை விளக்கம் அளித்துள்ளார்.
திரிஷா இன்ஸ்டாவில் எச்சரிக்கை பதிவை இடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, எக்ஸ் தளத்தில் ஹேக்கர்கள் பதிவு செய்த டுவீட் டெலீட் செய்யப்பட்டது. இதனால் எக்ஸ் கணக்கு மீட்கப்பட்டதா அல்லது ஹேக்கர்கள் உஷாராகிவிட்டனரா என்பது தெரியவில்லை. திரிஷாவும் இதுவரை மீட்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை.