ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" | எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை | ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் | பதட்டத்துடன் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்திய ஏ.ஆர். முருகதாஸ் | ஆஸ்கர் விருதுக்காக நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ள தயார் : வீர தீர சூரன் நடிகர் புதிய லட்சியம் | என் சகோதரி நல்லா நடித்திருக்கிறாரா? - பிரித்விராஜிடம் விசாரித்த அமீர்கான் |
கடந்த சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக ஜனவரி 14ம் தேதி தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் 'சங்கராந்திகி வஸ்துனம்' என்கிற படம் வெளியானது. ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்த இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். குடும்பங்கள் ரசிக்கும் விதமாக கலகலப்பான படமாக வெளியான இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப்படமாக மாறியது.
குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'கேம் சேஞ்ஜர்' திரைப்படம் சரியாக போகாத நிலையிலும் புஷ்பா 2 திரைப்படம் ஓரளவுக்கு ஓடி முடிந்த நிலையிலும் இருந்ததால் இந்த படத்திற்கு போட்டியின்றி நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய நாயகன் வெங்கடேஷ், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, “மீண்டும் சங்கராந்திகி வஸ்துனம் படத்தில் நிகழ்ந்ததை போன்ற அதே மேஜிக்கை இதன் இரண்டாம் பாகத்தில் நிகழ்த்துவேன்.. வரும் 2027 சங்கராந்தி பண்டிகை வெளியீடாக அந்த படம் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.