லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படம் வருகிற 6-ம் தேதி திரைக்கு வரும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடக்க, ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்துக்காக உடல் எடையை குறைத்து ஸ்டைலிசான கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜித். இதில் ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படத்தில் இடம்பெற்ற ‛வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அஜித் ரசிகர் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்ற இந்த பாடலை புதுமையான முறையில் அவர் ரீமிக்ஸ் செய்துள்ளாராம்.
இதுபோன்று மார்க் ஆண்டனி படத்திலும் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி என்ற பாடலை ஜி. வி .பிரகாஷ் குமார் ரீமிக்ஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.