சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

இந்திய இசையமைப்பாளர்களில் பிரபலமானவர் இளையராஜா. 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது இசைக்கு வெளி நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ரஷ்ய நடனக் கலைஞர்கள் தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இளையராஜாவை சென்னையில் உள்ள அவரது ஸ்டுடியோவில் சந்தித்து, இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்களுக்கு நடனம் ஆடினார்.
குறிப்பாக ‛மீரா' படத்தில் வரும் ‛ஓ பட்டர்பிளை...' என்ற பாடலுக்கும், ‛சொல்ல துடிக்குது மனசு' படத்தில் வரும் ‛பூவே செம்பூவே...' என்ற பாடலுக்கும் தங்களது நேர்த்தியான நடனத்தால் இளையராஜா மற்றும் பார்வையாளர்களை வசீகரித்தனர்.
இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இளையராஜா, ‛‛ரஷ்யாவில் இருந்து வந்து எனது ஸ்டுடியோவில் சிறப்பான நடன நிகழ்ச்சியை நடத்தி காண்பித்த கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்களின் நடனம் நளினமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், இதயத்தை தொடுவதாகவும், வசீகரிக்க கூடியதாகவும் இருந்தது'' என குறிப்பிட்டுள்ளார்.