மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித்குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'விடாமுயற்சி'. வரும் பிப்ரவரி 6ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இதன் டீசர், டிரைலர், பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்றிரவு இப்படத்தின் டிரைலர் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதில் இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித்திடம் காட்சிகளை விளக்குவதும், ஆக்ஷன் காட்சிகளை படமாக்கும் விதமும் இடம்பெற்றிருந்தது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த 'யுஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 900 தியேட்டர்களில் விடாமுயற்சி திரையிடப்படுவதாக தெரிகிறது. கேரளாவில் 250, கர்நாடகாவில் 250, ஆந்திரா - தெலுங்கானாவில் 500, ஓவர்சீஸ் 1500, இது தவிர இன்னும் சில மொழிகளில் 250 தியேட்டர்களில் விடாமுயற்சி படத்தை திரையிட திட்டமிட்டுள்ளார்கள். அந்த வகையில் மொத்தம் 3650 தியேட்டர்களில் அஜித்தின் விடா முயற்சி வெளியாகிறது.