மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தமிழ் சினிமா உலகில் இயக்குனர்கள் நடிகர்களாகவும், இசையமைப்பாளர்கள் நடிகர்களாகவும் மாறியிருக்கிறார்கள். அவர்களில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் ஜிவி பிரகாஷ்குமாருக்கு இந்த 2025ம் ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமையப் போகிறது.
2006ம் ஆண்டு வெளிவந்த 'வெயில்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷுக்கு 'பராசக்தி' படம் 100வது படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படம் இந்த ஆண்டு வெளிவந்துவிடும் என்றுதான் சொல்கிறார்கள்.
இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ்குமார் 2015ல் வெளிவந்த 'டார்லிங்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பத்து ஆண்டுகளில் அவர் 25 படங்களில் நாயகனாக நடித்து முடித்துள்ளார். அவரது 25வது படமாக 'கிங்ஸ்டன்' படம் வெளியாக உள்ளது.
ஒரே வருடத்தில் நாயகனாக 25வது படமும், இசையமைப்பாளராக 100வது படமும் வெளிவந்தால் அது ஜிவி பிரகாஷுக்கு தனிப் பெருமைதான்.