மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாக இருந்த படம் 'புறநானூறு'. ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படம் டிராப் ஆனது. சுதா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. இருந்தாலும் இருவரும் மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்ட 'புறநானூறு' படம் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அந்தப் படம்தான் 'பராசக்தி' என்ற பெயரில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிக்க உருவாகி வருகிறது. நேற்று இந்தப் படத்தின் டைட்டில் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. 1960களில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் தோற்றத்தையும், அவரது கதாபாத்திரத்தையும் நேற்றைய டீசர் மூலம் பார்த்த ரசிகர்கள் 'அமரன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், சூர்யா ரசிகர்களுக்கோ மிகப் பெரும் வருத்தமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை சூர்யா 'மிஸ்' செய்திருக்கக் கூடாது என்று கமெண்ட் செய்துள்ளார்கள். ஒருவேளை ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் 'பராசக்தி' படத்தில் நடிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம். ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் சூர்யா தற்போது குடும்பத்தினருடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்ற பேச்சும் கோலிவுட்டில் இருக்கிறது.