'ஆர்ஆர்ஆர்' டிரைலரை முந்திய 'ஹிட் 3' | பிளாஷ்பேக்: காட்சியை தத்ரூபமாக்க, கழுதைகளை கொண்டுவரச் செய்து, படப்பிடிப்பு நடத்திய 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் டி ஆர் சுந்தரம் | இளையராஜா நோட்டீஸ்: இன்று பதில் கிடைக்குமா ? | அஜித்தின் அடுத்த படமும் தெலுங்கு நிறுவனத்திற்கே..?? | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! |
காலத்தால் அழியாத காவிய திரைக்காவியங்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கி, பிரமாண்டத்தின் அடையாளமாக காட்சி தந்த எஸ் எஸ் வாசனின் “ஜெமினி ஸ்டூடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்திற்காக எம் ஜி ஆர் நடித்துக் கொடுத்த ஒரே திரைப்படமும், எம் ஜி ஆரின் 100வது படமுமாக வெளிவந்த திரைப்படம்தான் “ஒளிவிளக்கு”.
“பூல் அவுர் பத்தர்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் தமிழாக்கமான இத்திரைப்படத்தில் ஒரு திருடனாக நடித்திருப்பார் எம் ஜி ஆர். பொதுவாகவே தனது படங்களில் புகைப்பது போன்றோ, மது அருந்துவது போன்றோ எம் ஜி ஆர் ஒருபோதும் நடித்ததே இல்லை. தீய பழக்கங்களற்ற தூயவராகவே படங்களில் நடித்து நல்ல “இமேஜ்” ஒன்றை பேணி வந்த எம் ஜி ஆருக்கு ஒரு பெரும் சோதனையைத் தந்தது இந்த “ஒளிவிளக்கு” திரைப்படம்.
“பூல் அவுர் பத்தர்” ஹிந்திப் படத்தின் கதையில், கதையின் நாயகன் ஒரு காட்சியில் மதுபானம் அருந்தியே ஆக வேண்டும் என்றிருக்க, அதன் தமிழாக்கமான “ஒளிவிளக்கு” திரைப்படத்தில் அப்படி ஒரு காட்சியை எப்படி வைப்பது? எம் ஜி ஆர் மது அருந்துவது போல் காட்சியா? அவர் இத்தனை காலம் கட்டிக்காத்து வந்த அவரது இமேஜ் என்னாவது? போன்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், கதைப்படி நாயகன் மது அருந்தியே ஆகவேண்டும் என்பது கட்டாயம்.
படத்தில் கதாநாயகியாக நடன மங்கை வேடத்தில் நடித்திருக்கும் ஜெயலலிதா, எம் ஜி ஆர் முன் நடனமாடி, பின் அவரது முகத்தில் மயக்க மருந்தை அடித்து, அந்த மயக்க நிலையில் அவர் மது அருந்துவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், தன் இமேஜ் காப்பற்றப்பட்டு விடும் என்ற நம்பிக்கை எம் ஜி ஆருக்கு வரவே இல்லை. எனவே மயக்கம் தெளிந்ததும் எம் ஜி ஆருக்கு உள்ளிருந்து இன்னொரு எம் ஜி ஆர் அதாவது அவரது மனசாட்சியே எதிரே தோன்றி “தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா? மனிதன்தானா? இல்லை நீதான் ஒரு மிருகம், இந்த மதுவில் விழும் நேரம், மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும்.” என்று பாடி மதுப்பழக்கத்தை எதிர்த்து, அதன் தீமையை விளக்கி, மனசாட்சியாக வரும் எம் ஜி ஆர் பாடுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டு, ஒரு பிரசாரப் பாடலாக அமைந்து, தன் இமேஜை காப்பாற்றிதோடு, தன்னைப் பின் தொடரும் ரசிகர்களுக்கும், வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கும் நற்சிந்தனையைத் தரும் பாடலாகவும் அமைத்துத் தந்து, “ஒளிவிளக்கு” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டார் மக்கள் திலகம் எம் ஜி ஆர்.