'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்புரான்'. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினராக மம்மூட்டி கலந்து கொண்டார்.
அப்போது பிரித்விராஜ் மேடையில் கூறுகையில், " லைகா நிறுவனர் சுபாஸ்கரண் என்னிடம் லைகா நிறுவனத்திற்காக ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க முடியுமா ? என கேட்டார். ஒரு புது இயக்குனருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், நான் ஒரு பகுதி நேர இயக்குனர். என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரஜினிக்கான கதையை தயார் செய்ய முடியாது என்பதால் அந்த படம் நடைபெறவில்லை. அதேசமயம் சுபாஸ்கரணுடன் நட்பு தொடர்ந்து இன்று எம்புரான் உருவாகியுள்ளது" என தெரிவித்துள்ளார்.