'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த 2000ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடித்து வெளிவந்த படம் 'அலைபாயுதே'. இப்படம் இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட மணிரத்னம் அலைபாயுதே படத்தின் ரகசியம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, "நான் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோலை வைத்து இயக்க தான் முதலில் திட்டமிட்டிருந்தேன். ஷாருக்கானும் இந்தக் கதைக்கு ஓகே சொல்லியிருந்தார். ஆனால், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் எப்படி அமைய வேண்டும் என்பது அப்போது எனக்கு சரியாக தெரியவில்லை. அதனால், அலைபாயுதே படத்தை எடுக்காமல், 'தில் சே' படத்தை இயக்கினேன். தில் சே படத்திற்கு பிறகு தான், அலைபாயுதே கதையில் எது மிஸ் ஆனது என்பதை கண்டுபிடித்தேன்" என தெரிவித்துள்ளார். மேலும், அலைபாயுதே படம் ஹிந்தியில் 2002ம் ஆண்டு 'சாத்தியா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதனை ஷாட் அலி இயக்க விவேக் ஓபராய் - ராணி முகர்ஜி நடித்திருந்தனர்.