அபிராமிக்கு சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல் | ‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் |
மலையாளத்தில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டவர் நடிகர் பிரித்விராஜ். அதன்பிறகு இயக்குனராகும் ஆசையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து ‛லூசிபர்' என்கிற அரசியல் பின்னணி கொண்ட படம் இயக்கினார். படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி மலையாள சினிமாவில் முதலில் 200 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையை பெற்றது. அதன் பிறகு ‛ப்ரோ டாடி' என்கிற படத்தை இயக்கிய பிரித்விராஜ் மூன்றாவது முறையாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக ‛எம்புரான்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கிறது என்கிற தகவலை தன்னை அறியாமலேயே சொல்லிவிட்டார் பிரித்விராஜ்.
லூசிபர் படத்தின் தொழில்நுட்பம் குறித்து அவர் பேசும்போது, “இந்த எம்பிரான் படத்திற்காக நான் வழக்கமான லென்ஸ்கள் எதையும் பயன்படுத்தவில்லை. இதற்கு பதிலாக இந்த படத்தின் மூன்று பாகங்களிலுமே அனமார்பிக்ஸ் என்கிற தொழில்நுட்பத்தில் 1:2:8 என்கிற விகிதாச்சார கணக்குப்படி காட்சிகளை படமாக்கி இருக்கிறேன். இது படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும். ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் தனது திறமையான பங்களிப்பை இதில் கொடுத்துள்ளார்” என்று பிரித்விராஜ் கூறியுள்ளார். “இதன் மூன்று பாகங்களிலுமே” என அவர் கூறியதன் மூலம் இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கிறது என்பது தற்போது உறுதியாகி உள்ளது.