சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ஹிந்தி படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து தற்போது ராம்சரண் நடிக்கும் 16வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில், ஹிந்தி இயக்குனர் கரண் ஜோகரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்வி கபூரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுந்தது.
அதற்கு ஜான்வி, திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து கணவர் மற்றும் பிள்ளைகளுடன் திருப்பதியில் குடியேற வேண்டும். குடும்பத்தாருடன் அங்கு நேரத்தை செலவிட விரும்புவதாகவும், வாழை இலையில் சாப்பிட்டு கோவிந்தா கோவிந்தா என சொல்ல வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
ஜான்வி கபூர் தனது தந்தை மற்றும் தங்கையுடன் அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.