விஜய்யுடன் போட்டி நடனம் ; சாய் பல்லவி விருப்பம் | திரையுலக பயணத்தில் 40 வருடங்களை நிறைவு செய்த நதியா | சல்மானின் ‛சிக்கந்தர்' படத்தில் சத்யராஜ் | எம்புரான் 2வில் பஹத் பாசிலா : யூகத்தை கிளப்பிய புகைப்படம் | மூன்று வருடமாக நான் சிங்கிள் தான் ; ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த பார்வதி | விடாமுயற்சி படத்திற்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி | ''கேரவனில் நடந்த சம்பவம்...'': மனமுடைந்த நிகழ்வை பகிர்ந்த தமன்னா | ரிலீசுக்கு தயாராகும் டேனியல் பாலாஜியின் கடைசி படம் | கதை நாயகன் ஆனார் ராமர் | 'விடாமுயற்சி'யில் ஒரு வாரத்தில் எனது கேரக்டரை மாற்றினார் இயக்குனர் : ரெஜினா |
முன்னணி மலையாள நடிகர் கே.ஆர்.ஜெயச்சந்திரன் மீது சமீபத்தில் மிக கொடுமையான பாலியல் புகார் அளிக்கப்பட்டது. தனது உறவுக்காரின் 4 வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த சிறுமியின் தந்தை கசாபா போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜெயச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கோழிக்கோடு செசன்ஸ் கோர்ட்டில் ஜெயச்சந்திரன் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது, இதையடுத்து ஜெயச்சந்திரனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்கிடையில் அவர் தலைமறைவாகிவிட்ட தகவல் போலீசுக்கு கிடைத்தது.
ஜெயச்சந்திரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். அதனை விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கும்படியும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.