டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா |
பல கோடி ரூபாய் செலவில் தயாரான படம் வசூலை அள்ளித் தரும் என எதிர்பார்த்த நிலையில் சில கோடி ரூபாய் செலவில் தயாரான படம் வசூலை அள்ளித் தருகிறது. இப்படி நடப்பது தெலுங்குத் திரையுலகத்தில். விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் இந்த பொங்கலுக்கு இரண்டு தெலுங்குப் படங்கள் வெளிவந்தன.
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க 'கேம் சேஞ்ஜர்', அனில் ரவிப்புரடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்க 'சங்கராந்திகி வஸ்துனம்'. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான 'கேம் சேஞ்ஜர்' படம் இன்னும் 200 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. அதே சமயம் 50 கோடி செலவில் தயாராகி தெலுங்கில் மட்டுமே வெளியான 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 200 கோடி வசூலைக் கடந்துவிட்டது.
தெலுங்கில் வெளியான ஒரு பிராந்தியத் திரைப்படம் ஒரே வாரத்தில் 203 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.