அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
ஒரே படத்தில் 4 கதைகள் கொண்ட ஆந்தாலஜி படமாக 'சிரிக்காதே' படம் முதன்முதலில் வந்தது. அதை தொடர்ந்து 1942ல் ஒரே டிக்கெட்டில் இரண்டு படங்கள் பார்க்கும் வகையில் வந்த படம்தான் 'சம்சாரி, சன்யாசி'. இரண்டு படமும் தனித்தனி தணிக்கை சான்றிதழுடன் வெளியானது. ஆனால் இரண்டு படங்களையும் இயக்கியவர் எம்.கிருஷ்ணநர்த்தனம்.
'சம்சாரி' படத்தில் சதாசிவம், பி.டி.ராம், புதுக்கோட்டை எஸ்.ருக்மணி, மாரியப்பா, தி.க.ரஞ்சிதம், கே.வரலட்சுமி, கே.ராஜலட்சுமி, டி.ஏ.ராஜேஸ்வரி, எம்.நடானம், டி.எஸ்.லோகநாதன், பி.எஸ்.பி.தொண்டைமான் நடித்திருந்தார்கள். நாட்டு வைத்தியர் ஒருவர் தன் மகளை தன்னைப்போல் ஒரு நாட்டு வைத்தியருக்குத்தான் மணம் முடித்து கொடுப்பேன் என்று அடம்பிடிக்கிறார். ஆனால் வாய்ப்பதோ ஆங்கில மருத்துவர். இருவருக்குள்ளும் நடக்கும் கலாட்டாக்கள்தான் கதை.
'சன்யாசி' படத்தில் பி.ஏ.குமார், பி.ஜி.வெங்கடேசன், எம்.எல்.பதி, சி.எஸ்.டி.சிங், 'கொட்டாபுலி' ஜெயராம், பி.எஸ்.ஞானம், பி.ஆர்.மங்கலம், டி.எஸ்.ஜெயா, 'லூஸ்' ஆறுமுகம், 'மாஸ்டர்' தங்கவேல், எம்.வி. சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கொள்ளைக்காரன் ஒருவன் ராஜாராம் என்பவரது மனைவி சீதை மீது ஆசை கொள்கிறான். இது தெரியாமல் ராஜாராம் அந்த கொள்ளைகாரனிடமே சென்று மகள் படிப்புக்கு உதவி கேட்கிறான். இதை பயன்படுத்தி கொள்ளைக்காரன் அவருக்கு உதவி செய்து விட்டு அதற்கு பரிகாரமாக சீதையை கடத்திச் செல்கிறான். கடத்தப்பட்ட சீதையை இன்னொரு பெண் காப்பாற்றுவது கதை.
மக்களும் ஒரே டிக்கெட்டில் இரண்டு படத்தை பார்த்து மகிழ்ந்து வெற்றி பெறச் செய்தனர். படத்தை புதுக்கோட்டையை தலைமையிடமாக கொண்ட ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்தது.