'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
2000-ல் மிஸ் வேர்ல்டு வென்றவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஹாலிவுட் நடிகரும், பாப் பாடகருமான நிக் ஜோனஸை 2018ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
2002ம் ஆண்டில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் பல ஹிந்திப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வந்த பிரியங்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென்னிந்தியப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார், அதுவும் தெலுங்குப் படம்.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தில் பிரியங்கா தான் கதாநாயகி என தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்த வேலைகளுக்காக அவர் ஹைதராபாத் சென்றுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
ஹைதராபாத்தில் சில்குர் பாலாஜி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் புகைப்படங்களைப் பகிர்ந்து, "ஸ்ரீ பாலாஜியின் ஆசீர்வாதத்துடன் புதிய அத்தியாயம் தொடங்குகிறது. நாம் அனைவரும் நம் இதயங்களில் அமைதியையும், நம்மைச் சுற்றிலும் செழிப்பையும், மிகுதியையும் காணட்டும். கடவுளின் அருள் எல்லையற்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.