இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி என தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கியவர் பாலா. சிறு இடைவெளிக்கு பின் இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛வணங்கான்'. அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சமுத்திகனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இந்த படம் பொங்கலை முன்னிட்டு இன்று(ஜன., 10) வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு கடைசிநேர வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. காரணம் இப்படத்தை ரிலீஸ் செய்ய கேடிஎம் கிடைக்கவில்லை. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி பிரச்னையால் இந்த சிக்கல் எழுந்தது. பின்னர் தயாரிப்பாளர் அதை சரி செய்ததும் கேடிஎம் அனுமதி கிடைத்தது. இதையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காலை 11 மணிக்கு பின் இந்தப்படம் வெளியானது.