2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'அண்ணா' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடரில் பல நடிகர்கள் மாறிவிட்டனர். இருப்பினும் சீரியலின் டிஆர்பி பெரிய அளவில் பாதிக்கவில்லை. அதேசமயம் சில நடிகர்கள் புதிதாக என்ட்ரி கொடுத்து எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர். அண்மையில் பாக்கியலெட்சுமி சீரியல் பிரபலமான ரோஸாரி, அண்ணா சீரியலில் நடிக்க கமிட்டானார். இந்நிலையில், தற்போது பாக்கியலெட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விகாஸும், அண்ணா தொடரில் முக்கிய கேரக்டரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் தற்போது ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது.