'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்த நிலையில் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் இங்கே முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் தெலுங்கிற்கு சென்று அங்கே 'மகாநடி' படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெரும் அளவிற்கு உயர்ந்தார். அதன் பயனாக தற்போது பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த 'பேபி' ஜான் திரைப்படம் ஹிந்தியில் வெளியானது. இன்னொரு பக்கம் தனது நீண்ட கால நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்.
பேபி ஜான் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த அவர், தற்போது முதன் முறையாக திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டு பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கே புக்கட் தீவில் ஜாலியாக சுற்றித் திரியும் புகைப்படங்களையும் சில வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அங்கே ஒரு ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்து பயணிக்கும் ஒரு வீடியோவையும் கூட வெளியிட்டுள்ளார். ஆனால் இத்தனை புகைப்படங்களில் ஒன்றில் கூட தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை அவர் வெளியிடவில்லையே என ரசிகர்கள் அவரைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்து வருகிறார்கள்.