மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையில் இருந்து தமிழுக்கு வந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இங்கே சிம்புவுடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி பிறகு அதிலிருந்து வெளிவந்தார். கடந்த சில வருடங்களாகவே பட வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை கடந்த 2022ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவர் ஹன்சிகா மற்றும் அவரது அம்மா மோனா மோத்வானி ஆகியோருடன் தனது கணவரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதாக தற்போது மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு பிரிவுகளில் கீழ் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020ல் பிரசாந்த்-முஸ்கான் திருமணம் நடைபெற்றது. அதே சமயம் 2022லேயே இந்த குடும்ப டார்ச்சர் காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார் முஸ்கான் நான்சி ஜேம்ஸ். இந்த நிலையில் தான் தற்போது தனது கணவரின் குடும்பத்திற்கு எதிராக இப்படி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இடையில் தனது கணவருடன் முஸ்கான் சமரசமாக செல்ல விரும்பி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு ஹன்சிகா மற்றும் அவரது அம்மா இருவரும் குறுக்கீடு செய்து முட்டுக்கட்டை போட்டதாகவும் அதன் விளைவாகவே இப்படி ஒரு புகாரை முஸ்கான் அளித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.