பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி 2' படம் தந்த பான் இந்தியா வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் வெளியான அனைத்து முக்கியமான பான் இந்தியா படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவற்றில் பாலிவுட் நடிகைகள்தான் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள்.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படத்தில் ஷ்ரத்தா கபூர், ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஆலியா பட், 'கல்கி 2898 ஏடி' படத்தில் தீபிகா படுகோனே, 'தேவரா' படத்தில் ஜான்வி கபூர் என பாலிவுட் நடிகைகள் நடித்திருந்தார்கள். தற்போது வெளியாக உள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்திலும் பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி தான் நடித்துள்ளார்.
'புஷ்பா 1, 2' படங்களில் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, 'சலார்' படத்தில் தமிழ் நடிகையான ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஹிந்தி கதாநாயகி இல்லை என்றாலும் 'புஷ்பா 2' படம் இந்திய அளவில் நம்பர் 1 வசூலைக் குவித்தது. ஆக, படத்தின் வெற்றி, கதாநாயகி யார் என்பதில் இல்லை என்பதை 'புஷ்பா 2' படத்தின் வெற்றி புரிய வைத்துள்ளது.