பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தில் ராஜூ அவரது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். தமன் இசையமைக்கிறார் .
இப்படம் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராம் சரண், ஷங்கர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனால் இதில் கியாரா அத்வானி கலந்து கொள்ளவில்லை.
கியாரா அத்வானி உடல்நிலை சரியில்லாத காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல் பரவியது. ஆனால் இதனை கியாரா அத்வானியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "கியாரா அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கபடவில்லை. அவருக்கு தொடர் வேலை காரணமாக சோர்வு ஏற்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார்'' என தெரிவித்துள்ளார் .