பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

கடந்தாண்டு அஜித் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. இந்தாண்டு அவர் நடித்துள்ள இரு படங்கள் வெளியாகின்றன. முதலில் மகிழ்திருமேனி இயக்கி உள்ள ‛விடாமுயற்சி' படம் இந்த பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.
மற்றொருபுறம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார் அஜித். அவருடன் திரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதுவும் அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் ஏப்., 10ல் படம் வெளியீடு என அறிவித்துள்ளனர். அன்றைய தினம் தனுஷின் ‛இட்லி கடை' படமும் ரிலீஸாகிறது.