இனி கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் - கலையரசன் | தெலுங்கு இயக்குனர் மீது பூனம் கவுர் குற்றச்சாட்டு | விஜய் படத்தால் மன உளைச்சலுக்கு ஆளானேன் - மீனாட்சி சவுத்ரி | 'புஷ்பா 2' படத்தில் கூடுதல் 20 நிமிடங்கள் சேர்ப்பு | கார் ரேஸ் பயிற்சியில் விபத்து: அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி தப்பிய அஜித் | ரஜினி, சிவகார்த்திகேயன் படங்கள் மோதலா? | என்டிஆர் - நீல் படத்தில் இணையும் முக்கிய பிரபலங்கள் | கமல் 237வது படத்திற்கு யார் இசை..? | அமீர்கான் தயாரிக்கும் ஹிந்தி படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | நடிகர் முரளி, இளையராஜா - ஆச்சரிய ஒற்றுமை |
காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால் தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார். மேலும் மாடலிங்கிலும் அசத்தி வரும் இவர் சத்தமின்றி தனது நீண்டகால நண்பராக இருந்து வரும் நவ்னீத் என்பவரை ஜன., 2ல் கோவாவில் திருமணம் செய்தார். அங்குள்ள தனியார் ஓட்டலில் இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்க இவர்களின் திருமணம் இனிதே நடந்தது.
திருமணத்திற்கு பின் கணவர் நவ்னீத் உடன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சாக்ஷி. அவர் கூறுகையில், ‛‛15 வருடமாக சினிமாவிற்கு முன்பு இருந்த நவ்னீத்தை எனக்கு தெரியும். ஐடி துறையில் இருந்து நான் சினிமாவிற்கு போகணும் என முடிவெடுத்த போது எனக்கு உறுதுணையாக இருந்தவர். சின்ன வயது முதலே எனது நண்பராக இருப்பவரை திருமணம் செய்தது கடவுளின் ஆசீர்வாதம். என்னுடைய நல்லது, கெட்டது எல்லவாற்றையும் அறிந்த ஒரு நபர். எனக்கு எல்லாமுமாக அவர் உள்ளார்.
தமிழில் இரண்டு, மூன்று படம் ரிலீஸிற்கு தயாராகி உள்ளது. கன்னடம், மலையாளத்திலும் ஒரு படம் ரிலீஸாக போகிறது. திருமணத்திற்கு பின் நிறைய நடிகைகள் நடித்து வருகிறார்கள், வெற்றியும் பெறுகிறார்கள். நம்முடைய கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
திருமணத்தில் அவசரம் காட்டவில்லை. என் மனதுக்கு சரி என்று பட்டதால் திருமணம் செய்தேன். அமெரிக்காவில் தனது வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடி இந்தியாவிற்கு ஷிப்ட் ஆக போகிறார் நவ்னீத். எனக்காக அவர் இப்படி ஒரு முடிவு எடுக்கும்போது அவருக்காக நானும் ஏதாவது செய்யணும் என நினைத்தேன். அதான் திருமணம் செய்தேன். மற்றபடி அவசர முடிவுவை எடுக்கவில்லை. நிச்சயம் நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். நாளை முதலே படப்பிடிப்புக்கு செல்கிறேன். நவ்னீத் உடன் இருக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதுமே எனக்கு ஹனிமூன் போன்று தான் உணர்கிறேன். அந்தளவுக்கு என்னுடைய சிறந்த நண்பராக அவர் உள்ளார்.
இவ்வாறு சாக்ஷி கூறினார்.