பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தமிழில் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தவர் நவ்நீத் கவுர். இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி சட்டசபை உறுப்பினர் ராணாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவர் வழியில் அரசியலிலும் குதித்தார். அமராவதி தொகுதியில் ராணா தனிப்பட்ட செல்வாக்கில் இருந்தார். இதனால் அமராவதி பார்லிமென்ட் தேர்தலில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நவ்நீத் கவுர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கபட்ட தனி தொகுதியில் நவ்நீத் கவுர் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக அவர் மீது வழக்கு தொரடப்பட்டது. மும்பை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின்போது நந்நீத்தின் ஜாதி சான்றிதழை கோர்ட் ரத்து செய்தது.
இந்த வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் நவ்நீத் ஆஜராகவில்லை. இதனால் அவரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் நவ்நீத் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நவ்நீத் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.